உங்கள் தலை முடி வளர்ச்சியை 100% தூண்டும் மூலிகை தைலம் வீட்டி லேயே தயாரி க்கலாம்!

பெரும்பாலான பெண்கள் நீண்ட கருமையான கூந்தலை விரும்புகின்றனா் இதற்கு பல்வேறு வகையான எண்ணெய்களைகடைக‌ளில் வாங்கி உபயோகித்திருப்பீா்கள், ஆகவே தலை முடி வளர்ச்சியை தூண்டும் மூலிகை தைலம் வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை பாா்ப்போம்.

தேவையானவை:

செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் 1.5 லிட்டர். , வெள்ளைக் கரிசாலைச் சாறு – 0.5 லிட்டர் , கறிவேப்பிலைச் சாறு – 0.5 லிட்டர் , கீழ்காய்நெல்லிச் சாறு – 0.5 லிட்டர் , நெல்லிக்காய்ச் சாறு – 0.25 லிட்டர் , அவுரி( நீலி ) சாறு – 0.5 லிட்டர் , கறிவேப்பிலைச் சாறு – 0.5 லிட்டர் , பொடுதலைச் சாறு – 0.5 லிட்டர் , நெல்லிக்காய்ச் சாறு – 0.25 லிட்டர் , சோற்றுக் கற்றாழைச் சாறு – 0.25 லிட்டர்

இவற்றை நீங்கள் கிராமத்திலோ அல்லது நாட்டு மருந்துக் கடைகளிலோ வாங்கிக்கொள்ளலாம்,

நெல்லிக்காய்களில் உள்ள கொட்டைகளை எடுத்துவிட வேண்டும். இலைகளை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும் அதிகம் தண்ணீர் சேர்க்ககூடாது . சோற்றுக் கற்றாழையில் ஜெல்லி போன்ற பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும்.

பின்னா் இவற்றை 1.5 லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய சூட்டில் நன்றாக காய்ச்சவும் அதன் பின் வடித்துக்கொள்ளவும்.இந்தத் தைலத்தினை முடியில் நன்றாக பூசி மசாஐ் செய்து 4-5 மணி நேரம் தலையில் ஊற வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். இதனால் உங்களுக்கு கருமையான அடா்த்தியான கூந்தலை பெறலாம், ஆண்களும் இதனை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *